நீங்க தான் என் ரட்சகன்!.. டிரம்ப் காலில் விழுந்த பாகிஸ்தான்..கழண்டு கொண்ட சீனா!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற (WEF 2026) கூட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புதிய முன்னெடுப்பான ‘அமைதி வாரிய’ (Board of Peace) சாசனத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கலந்துகொண்டு சாசனத்தில் கையெழுத்திட்டார்.

டிரம்ப் ஒரு இரட்சகர் :
சாசனத்தில் கையெழுத்திட்ட பிறகு மேடையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், டொனால்ட் டிரம்பை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார், “கடந்த 2025 மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தடுத்து நிறுத்தியவர் டிரம்ப் தான். அவரது தலையீட்டால் கோடிக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.”

“அமெரிக்காவின் இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் முழு மனதுடன் கைகோர்க்கிறது. என்று ஷெரிஃப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் இந்த நிகழ்வில் பார்வையாளராகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது”.

சீனாவின் ‘நோ’.. இந்தியா புறக்கணிப்பு:
அமெரிக்கா உருவாக்கியுள்ள இந்த புதிய அமைதி வாரியத்தில் இணையுமாறு சீனாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாடு அதிரடியாக நிராகரித்துள்ளது.

“நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கட்டமைப்பை மட்டுமே மதிப்போம்; தனிநபர் தலைமையிலான புதிய அமைப்புகளை ஏற்க மாட்டோம்”

எனத் தெரிவித்துள்ள பெய்ஜிங், இந்த வாரியம் ஐநாவின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சி என்று விமர்சித்துள்ளது. இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், இந்தியப் பிரதிநிதிகள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

என்ன இந்த ‘அமைதி வாரியம்’?
காசா போர் மற்றும் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதற்காக டிரம்ப் இந்த வாரியத்தை உருவாக்கியுள்ளார். இதில் உறுப்பினராகச் சேரும் நாடுகள் பெரும் நிதியை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் உள்ளன. இதுவரை பாகிஸ்தான், ஹங்கேரி, எகிப்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் தான் அமைதியை ஏற்படுத்தினார் என்ற கூற்றை இந்தியா ஏற்கனவே மறுத்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையாலேயே பதற்றம் தணிந்தது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.

Leave a Comment