மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (04.10.2025) தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் முக்கிய ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
எனவே, பின்வரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதேபோன்று தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகாவிற்கு உட்பட்ட ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, ராங்கியன்விடுதி, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, திருவோணம், தோப்புவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வல்லம், பழையதிருச்சம்பள்ளி, மேமாத்தூர், பெரிய மடப்புரம், சாத்தனூர், பரசலூர், கீழபரசலூர், மேலபரசலூர், ஆறுபாதி, விளநகர், மேலகட்டளை, கடலி ஒட்டங்காடு, நெடுவாசல், பெருங்குடி, கூடலூர், ராதாநல்லூர், ஆகிய சுற்றுவட்டார பகுதிகலிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான முன் நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.