தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தியதாம் பழைய தலைவர்களின் திடீர் முடிவுகள். இப்போது அதே பாதையில், அதிமுகவின் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தனது நீண்டகால அதிமுக பயணத்தை முடித்து, தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தலைமையிலான அரசியல் இயக்கத்தில் இணைந்துள்ளார்.
செங்கோட்டையன் decades-ஐ கடந்து, தன்னுடைய அனுபவம், கல்வித் துறையில் செய்த சாதனைகள் ஆகியவற்றால் தனக்கென ஒரு மதிப்பீட்டை உருவாக்கியவர். அவருடைய இந்த முடிவு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு நம்பிக்கையாக இருக்கும்.
இவர் இணைந்தது மூலம், விஜய் தலைமையிலான அரசியல் இயக்கம் ஒரு இளம் தலைமுறை + அனுபவம் கொண்ட கூட்டணியாக மாறுகிறது. இக்கூட்டணி, எதிர்கால தேர்தல்களில் பல கட்சிகளுக்கு சவாலாக இருக்கலாம் என்ற கணிப்பு உருவாகிறது.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த ரஜினி பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் ”ஜெயிலர்-2 படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. என்றும். வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்”.
’திடீரென்று நிருபர் ஒருவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்து இருக்கிறார் இதைப்பற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்டதற்கு ஒரே வரியில் ”நோ கமெண்ட்ஸ்” என்று பதில் அளித்தார்.
ரஜினி அளித்த இந்த பதிலால் ”நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்” என தலைவர் கூறியுள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.