தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது திருச்சி மற்றும் கரூரில் மிகப்பெரிய ரோட் ஷோ நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயின் வாகனத்தை சூழ்ந்து கொண்டதால் அவர் தேர்தல் பரப்புரை இடத்திற்கு வர காலதாமதமானது.
இதனால் அங்கிருந்தவர்கள் சுமார் ஏழு முதல் எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல துயர சம்பவங்களும் நிகழ்ந்தது. இதற்கெல்லாம் காரணம் விஜயின் தாமதமான வருகை தான் என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர். ரோட் ஷோவில் தனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து விஜய்க்கு முதலமைச்சர் ஆசை வந்துவிட்டது. என்று பல அரசியல் விமர்சனங்களும் வந்தது.
இதை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சுட்டிக்காட்டி உள்ளார். அதில் விஜய் இரண்டு ரோட் ஷோ நடத்திட்டு முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார். கனவு காண்பது தப்பில்லை. ஆனால் ஒரு பிரச்சனை என்று வரும் பொழுது ஓடி ஒளிவது தான் தப்பு. கரூர் துயர சம்பத்தின் போது இரவோடு இரவாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
இந்த மாதிரி ஒரு பிரச்சனை வரும் பொழுது விஜய் அங்கிருந்து எதிர்கொள்ள வேண்டும். பல இடைஞ்சல்கள் வரலாம் அதையெல்லாம் எதிர்கொண்டு வருவதுதான் ஒரு கட்சியின் தலைவனுக்கு சிறப்பு. எம்ஜிஆரின் வரலாறு புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் அவரின் கட்சிக்கு பல இடையூறுகள் வர வர பல போராட்டங்கள் நடத்தி அதில் இருந்து எழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி கலைஞர் ஒரு முறை போராட்டம் நடத்தும் பொழுது எல்லாரையும் பிடித்து சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழக்கை நடத்துவதற்கு நிதி தேவைப்பட்டிருக்கிறது, அதற்காக வீடு வீடாய் சென்று கேட்டுள்ளார்கள். உள்ளே இருப்பவர்கள் எல்லாம் மிசா வழக்கில் இருக்கிறார்கள். அதுக்கு குண்டாஸ் மாதிரி எப்பொழுது ரிலீஸ் என்றே தெரியாது.
அப்பொழுது ஸ்டாலின் சிறையில் இருக்கிறார். இந்திரா காந்தி ஹிட்லர் போல் சித்தரித்து பத்திரிக்கையில் கார்டூன் வரைந்தார் கலைஞர். அதுதான் தலைவன். ஆனால் விஜய் கரூர் சம்பவத்திலிருந்து வெளியே வர 30 நாட்கள் எடுத்துக் கொண்டார். எந்த ஒரு பிரச்சனையையும் தாங்க முடியாமல் ஓடி ஒளியும் விஜயை நம்பி மக்கள் எப்படி வருவார்கள். நெருக்கடி நிலையில் கட்சியை மேலே தூக்கிட்டு வர்றவன் தான் தலைவன்.
ஒரு கேஸ் போட்டதுக்கே முப்பது நாள் வீட்டை விட்டு வெளியே வரல. விஜயை மக்கள் எப்படி நம்புவார்கள். இந்த லட்சணத்தில் விஜய்க்கு முதலமைச்சர் கனவு வேற. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் எல்லாம் தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள் என்று பீத்திக்கொண்டு அலைகிறார். என்று சங்கர் தன் பாணியில் சவுக்கை சுழற்றி உள்ளார்.