latest news
நலிவடைந்தவர்களுக்கென கிராமபுற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்..குறுகிய கால இந்த திட்டத்தில் இவ்வளவு பயனா!..
இந்திய அஞ்சல்துறை மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்தவர்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நமது அஞ்சலகங்களில் உள்ளன. அதன்படி கிராமபுறத்தில் உள்ள வசதி குறைவாக இருப்பவர்களுக்கென கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம்தான் கிராம பிரியா எனும் அஞ்சல் காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் நாம் குறைந்த அளவு தொகையை மட்டுமே பெற முடியும் எனினும் இத்திட்டம் ஒரு மிக சிறந்த திட்டமாகும். இதனை பற்றிய தகவல்களை காணலாம்.
இந்த திட்டத்தில் பாலிசிதாரர்கள் 10 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும். 10 ஆண்டு முடிவில் நமது செலுத்திய தொகையானது நமது போனஸ் விகிதத்தின் அடிப்படையில் நமக்கு திரும்ப தரப்படும்.
வயது வரம்பு:
இத்திட்டத்தில் சேருவதற்கு நாம் 20 வயதிற்கு குறையாமலும் மற்றும் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
பாலிசி தொகை:
இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் ரூ 10000 முதல் அதிகபட்சமாக ரூ. 10,00,000 வரை நாம் பாலிசியை பெற்று கொள்ளலாம்.
முதிர்வு காலம்:
- இத்திட்டதிற்கான முதிர்வு காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
- மேலும் இத்திட்டத்திற்கு மாத அடிப்படையில் பிரிமியம் கட்ட வேண்டும்.
உதாரணமாக தனிநபர் ஒருவர் ரூ. 10,00,000 க்கு பாலிசி எடுத்திருந்தால் அந்த தொகை மற்றும் வயதின் அடிப்படையில் அவர் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையினை 10 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். மேலும் நாம் பிரிமியம் செலுத்த ஆரம்பித்து 4 ஆண்டுகள் கழித்து நாம் மொத்த தொகையில் இருந்தூ 20- தொகையை பெற்று கொள்ளலாம். அதேபோல் 7 ஆண்டுகள் முடிவுபெற்ற நிலையில் திரும்பவும் 20- தொகைய பெற்று கொள்ளலாம். பின் நமது பாலிசி முடிவு பெறும் காலத்தில் அதாவது 10 ஆண்டுகள் கழித்து மீதமுள்ள 60- பணத்தினை போனஸோடு சேர்த்து பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான போனஸ் தொகை 1000 ரூபாய்க்கு 45/- ரூபாய் ஆகும். எனவே இந்த பொன்னான திட்டத்தில் சேர்ந்து நாமும் பயனடைவோம்.