Finance
FDல் அதிக வட்டி வேணுமா?.. அப்போ இந்த பாங்க்ல முதலீடு செய்யுங்க..அது எந்த பாங்கா இருக்கும்?..
உத்திரவாதமான வருவாய்க்கு நிலையான வைப்புதொகை என்பது ஒரு சிறந்த வழியாகும். இந்த நிலையான வைப்பு தொகை என்ற வசதி அனைத்து வங்கிகளிலும் உண்டு. இந்த வைப்பு தொகையானது குறிப்பிட்ட கால அளவுகளிம் நாம் முதலீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை குறைந்தபட்சம் 7 நாள்கள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையிலும் முதலீடு செய்யலாம். இதில் நாம் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கிறோமோ அந்த காலம் முடிந்த பின் குறிப்பிட்ட அளவு வட்டியுடன் நாம் அசலையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறான முதலீட்டில் அதிக வட்டி வீதம் கிடைத்தால் நாம் அதிர்ஷ்டசாலியே. அப்படி ஒரு அதிக அளவி வட்டியை ஃபின்கேர் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க் தருகிறது. அதனை பற்றிய தகவல்களை காணலாம்.
2 கோடிக்கும் குறைவான அளவு நாம் முதலீடு செய்யும் தொகைக்கு ஃபின்கேர் நிறுவனமானது தற்போது வட்டி விகிதத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு 9.11% வட்டியும் மற்றோருக்கு 8.51% வட்டியும் தருகிறது. மேலும் இந்த நிலையான வைப்பு தொகையின் முதிர்வு காலம் 1000 நாட்கள் ஆகும். இந்த வைப்பு தொகையானது குறைந்தபட்சம் 5000க்கு மேலும் அதிகபட்சமாக 2 கோடியாகவும் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபின்கேர் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்கின் நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம்:
- நிலையான வைப்பு தொகையானது 7 முதல் 45 நாட்களுக்கு முதிர்வடைந்தால் அதற்கு 3% வட்டியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அதைப்போல் 46 முதல் 90 நாட்களுக்குள் முதிர்வடைந்தால் அதற்கு வட்டியாக 4.5% கணக்கிடப்படுகிறது.
- 91 முதல் 180 நாட்களுக்கு 5.50% வட்டியாகவும்
- 181 முதல் 365 நாட்களுக்கு 6.25% வட்டியாகவும்
- 12 மாதம் முதல் 499 நாட்களுக்கு 7.5% வட்டியாகவும்
- 500 நாட்களுக்கு 8.11% வட்டியாகவும்
- 501 முதல் 1.5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டியாகவும்
- 5 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு 7.80% வட்டியாகவும்
- 2 ஆண்டுகள் முதல் 749 நாட்களுக்கு 7.9% வட்டியாகவும்
- 750 நாட்களுக்கு 8.31% வட்டியாகவும்
- 3 ஆண்டுகள் முதல் 3.5 ஆண்கடுள் வரை 8.25% வட்டியாகவும்
- 5 ஆண்டுகள் முதல் 59 மாதங்களுக்கு 7.5% வட்டியாகவும்
- 59 மாதங்கள் 1 நாள் முதல் 66 மாதங்கள் வரை 8% வட்டியாகவும்
- 66 மாதங்கள் 1 நாள் முதல் 84 மாதங்கள் வரை 7% வட்டியாகவும் கணக்கிடப்படுகிறது.
மேலும் மூத்த குடிமக்களுக்கும் அவரவர் முதலீடு செய்யும் காலத்தை பொருத்து 3.6% முதல் 9.1% வரையிலும் வட்டியானது வழங்கப்படுகிறது.