தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் மனம் திறந்து பேசிய விஷயம் கிரிக்கெட்டில் பேசு பொருளாகி உள்ளது. விராட் கோலி பற்றி பேசிக் கொண்டிருந்த ஏபி டி வில்லியர்ஸ் அவர் தன்னிடம் ஒன்பது மாதங்கள் வரை பேசாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது, விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை பிறப்பு காரணமாக தான் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்றும் கூறினார். நேரலையில், விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு குழந்தை பிறக்க போவதை அறிவித்த சில நாட்களில் ஏபி டி வில்லியர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக கூறினார். மேலும், தான் தெரிவித்த தகவல் உண்மையில்லை என்றும் கூறினார்.
சமீபத்தில் ஏபி டி வில்லியர்ஸ் அளித்த பேட்டியில், “நாங்கள் அதை பற்றி பேசிவிட்டதால் இருவரும் ஒரே இடத்தில் இருப்பது எனக்கு தெரியும். நல்ல விஷயங்களுக்கு நன்றி! அவர் மீண்டும் என்னுடன் பேசுவது எனக்கு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது,” என்று தெரிவித்தார்.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தது பற்றிய பேசிய ஏபி டி வில்லியர்ஸ், “அவர் கடின காலங்களை கடந்து வந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நான் இத்தகைய சூழ்நிலைகளை எப்படி கடந்து வந்தேன் என்பதை வைத்து அவர் எத்தகைய நிலையில் இருக்கிறார் என்பது எனக்கு ஓரளவுக்கு தெரியும்.”
“அவர் எத்தனை போட்டிகளில் விளையாடி இருக்கிறார், அவரது வயது என்ன, அவர் அணியில் எப்படி இருக்கிறார், அதன் பின்னணியில் உள்ள அரசியல் உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். நம் மீது ஏராளமான அழுத்தம் இருக்கும், இதனால் அவரை திரையில் பார்க்கும் அனுபவம் எனக்கு எப்படி இருக்கும் என்பதை அவரிடம் மனம் திறந்து விளக்கினேன். அவர் தற்போது கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி தான். அவரது முடிவு மனதார எடுத்திருக்கிறார். நான் அவரது முடிவுக்கு 100 சதவீதம் ஆதரவாக இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.