Connect with us

Cricket

தோல்வி எதிரொலி.. ரோகித், கோலி & கோ-க்கு பறிக்கப்பட்ட சலுகை.. ஃபயர் மோடில் கம்பீர்!

Published

on

நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி, டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்தது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரையும் ஏமாற்றத்தில் தள்ளியது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நட்சத்திர வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆப்ஷனல் டிரெய்னிங் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த முறை அமலில் இருக்காது என்ற வகையில், நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என யாரும் இதனை பயன்படுத்த உரிமை கோர முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.

இந்திய அணி வழக்கப்படி ஆப்ஷனல் டிரெய்னிங் முறை சில வீரர்களுக்கு விருப்ப அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் முன்னணி பேட்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடாமல், போட்டிக்கு முன் உடலை இலகுவாக்கும் வகையில் லேசான பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவர். தற்போது இந்த முறை நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரரும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அணி நிர்வாகம் அனைத்து வீரர்களையும் இரண்டு நாட்கள்- அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31 பயிற்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். இதில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, யாரும் இதனை தவிர்க்கக்கூடாது,” என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

google news