india
பட்டைய கிளப்பிய பஜாஜ் பைக்…அசால்ட்டா அடிச்ச ஐயாயிரம்…
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்து கொண்டே தான் வருகிறது. சரக்குகளை ஏற்றிச் செல்ல உதவும் வாகனங்களும் சரி, தனி மனித போக்குவரத்திற்கு பயன்படும் வாகனமாக இருந்தாலும் சரி, அதனுடைய தேவைகள் தினமும் அதிகரித்து வந்த நிலையே காணப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றார் போல வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லப் போனால் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இடங்களில் கூட இலகுவாக பயணித்து அதிக இன்னல்களை அடையாமல் தங்களது இலக்கை எளிதாக்க இரு சக்கர வாகனங்களின் பங்கு அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க,அவர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனத்தினர்.
சி.என்.ஜி. எரிவாயுவில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது பஜாஜ் நிறுவனம்.இந்தாண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல் சி.என்.ஜி.யில் இயங்கும் நூற்றி இருபத்தி ஐந்து சிசி இஞ்சின் திறன் கொண்ட பைக்குகளை “பிரீடம்” என்ற பெயரில் அறிமுகம் செய்தது பஜாஜ்.
மகாராஷ்ட்ரா மட்டும் குஜராத்தில் மட்டுமே இந்த வகை பைக்குகளின் விற்பனையை துவக்கியது ஆரம்பத்தில். தற்போது இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் “பிரீடம் – 125” பைக்களின் விற்பனையை விரிவடைய வைக்க பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் விற்பனை செய்யப்பட்டு வந்த பஜாஜ் நிறுவனத்தின் “பிரீடம் – 125″வகை பைக்குகளின் ஐந்தாயிரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு வந்த இந்த வகையான இரு சக்கர வாகனம், இரண்டு மாதங்களில் ஐந்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு உரிமையான ஒன்றாக மாறிவிட்டது.
விற்பனையில் இருந்த கட்டுப்பாடுகளை பஜாஜ் நிறுவனம் தளர்த்தி, எல்லா நகரங்களிலும் “பிரீடம் -125” பைக்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளும் சூழலை உருவாக்கி வருவதால் இதன் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.