இனி 28 நாட்களுக்கு வேலிடிட்டி அல்ல.. புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்த bsnl..

இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் டெலிகாம் சேவையான பிஎஸ்என்எல் தற்போது ரீசார்ஜ் திட்டத்தின் கால அளவுகளை மாற்றம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 229 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி 4 ஜி டேட்டாவுடன் அதன் கால அளவுகளை மாற்றம் செய்துள்ளது.

அனைத்து டெலிகாம் நெட்வொர்க்கும் 300 ரூபாய்க்கு மேல்தான் 30 நாள் கால அளவு அல்லது 28 நாட்களுக்கு அதன் ரீசார்ஜ் வேலிடிட்டி இருக்கும். பிஎஸ்என்எல் மட்டும்தான் குறைந்த விலைக்கு நீண்டகால வேலிடிட்டியை வழங்கி வந்தது. தற்போது அதிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பிஎஸ்என்எல்.

bsnl
bsnl

229 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அதாவது எந்த தேதியில் இருந்து ரீசார்ஜ் செய்கிறார்களோ அதிலிருந்து அடுத்த மாதம் அதே தேதி வரை அதன் வேலிடிட்டி நாட்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கேலண்டர் கால அளவு. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறது.

அதேபோல போஸ்ட்பேட் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

மேலும் 2 ஜிபி டேட்டாவை முடித்து விட்டால் அதற்குப் பிறகு 40kbps வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. மேலும் வாய்ஸ் கால்களை போலவே டேட்டாவும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் ஆக கிடைக்கிறது. இந்த விலைக்கு இது பயனுள்ள லாபகரமான திட்டமாக இருக்கிறது. மேலும் இந்த காலண்டர் மாத வேலிடிட்டி வேண்டாம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் போதும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கும் பிஎஸ்என்எல் திட்டம் வைத்திருக்கிறது. அதிலும் அன்லிமிடெட் டேட்டா வாய்ஸ் கால்கள் என அனைத்தையும் கொடுக்கிறது.

Leave a Comment