Connect with us

tech news

கேமராவுடன் 4G ஸ்மார்ட்வாட்ச் வெளியிட்ட பயர்போல்ட்..!

Published

on

பயர்பால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் கேமரா ஸ்மார்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பயர்போல்ட் ஸ்னாப் என்று அழைக்கப்படுகிறது. 4ஜி எல்டிஇ சப்போர்ட் உடன் புது ஸ்மார்ட்வாட்ச் நானோ சிம் பொருத்திக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இதை கொண்டு 4ஜி கனெக்டிவிட்டி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்துடன் HD தரத்தில் படங்களை எடுப்பதற்கும், கியூஆர் கோட்களை ஸ்கேன் செய்யவும் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு ஆப்களை பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கிறது. சதுரங்க வடிவம் கொண்ட டயல் டிசைன் மற்றும் இரண்டு பட்டன்கள் கொண்ட பயர்போல்ட் ஸ்னாப் பயனர்கள் தேர்வு செய்ய ஏராளமான ஸ்டிராப் ஆப்ஷன்களை வழங்குகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இதில் 2.13 இன்ச் அளவில் HD AMOLED ஸ்கிரீன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், குவாட் கோர் கார்டெக்ஸ் பிராசஸர், மாலி கிராபிக்ஸ் யூனிட், ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் உள்ளதால், இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மெமரியை பொருத்தவரை 2GB மற்றும் 4GB ரேம், 16GB மற்றும் 64GB மெமரி கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இத்துடன் HD கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள பயர்போல்ட் ஸ்னாப் ஸ்மார்ட்வாட்ச் GSM/WCDMA/ LTE காலிங், ப்ளூடூத், 2.4 GHz வைபை சப்போர்ட், 1000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 30 நாட்கள் ஸ்டான்ட்பை மற்றும் காலிங் வசதியோடு 15 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

பயர்போல்ட் ஸ்னாப் ஸ்மார்ட்வாட்ச் ஆல்பைன் ஆலிவ், அர்கைக் பிளாக், பிளாக் ஸ்டாம், செர்ரி பிளஷ், கோகோவா பிரவுன், ஜெட் பிளாக் லூக்ஸ் மற்றும் மார்லெட் மரூன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2GB ரேம், 16GB மெமரி மாடல் விலை ரூ. 5999 என்றும் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 5999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்குகிறது.

google news