Connect with us

tech news

நல்ல ரிவ்யூ கொடுக்காத கிரியேட்டர்களுக்கு நூதன மிரட்டல்- பிக்சல் பஞ்சாயத்தில் சிக்கிய கூகுள்..!

Published

on

கூகுள் நிறுவனம் பிக்சல் போன் விஷயத்தில் புதிய பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது. கூகுள் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை தொழில்நுட்ப கிரியேட்டர்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இவ்வாறு நிறுவனங்கள் வழங்கும் புதிய சாதனங்களை கிரியேட்டர்கள் ரிவ்யூ செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இதே போன்று கிரியேட்டர்களுக்கு சாதனங்களை வெளியீட்டுக்கு முன்பே வழங்குவதற்காக “டீம் பிக்சல்” எனும் திட்டத்தை நடத்தி வருகிறது. கிரியேட்டர்கள் கூகுள் விதிமுறைகளை ஒப்புக் கொண்டு டீம் பிக்சல் திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும். பிறகு, இந்த திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு தனது சாதனங்களை முன்கூட்டியே வழங்கி வருகிறது.

சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய பிக்சல் சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றில் பிக்சல் போன்கள் ஏராளமான ஏஐ அம்சங்களை கொண்டிருந்தன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்களை பார்க்கும் போது, கூகுள் நிறுவனம் கிரியேட்டர்களை நூதன முறையில் மிரட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது.

ஸ்கிரீன்ஷாட்களின் படி, “கூகுள் பிக்சல் சாதனங்களை நீங்கள் மற்ற நிறுவன மாடல்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அதன்படி நீங்கள் பிக்சல் போன்களை தவிர்த்து மற்ற பிரான்டு மாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்சத்தில், நாங்கள் பிரான்டு மற்றும் கிரியேட்டர் இடையில் உள்ள உறவில் இருந்து நீக்கப்படுவீர்கள்,” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து கூகுள் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “டீம் பிக்சல் மற்றும் எங்களது ஊடகம் மற்றும் கிரியேட்டர் ரிவ்யூ திட்டம் முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக கூகுள் மற்றும் 1000ஹெட்ஸ் எனும் பி.ஆர். நிறுவனம் இணைந்து டீம் பிக்சல் திட்டத்தை உருவாக்கின.”

“இந்த திட்டத்தில் கிரியேட்டர்கள் மற்றும் கலந்து கொள்வோர் விதிமுறைகளை ஒப்புக் கொண்டு தங்களது பதிவுகளை ‘#teampixel’ அல்லது ‘#giftfromgoogle’ போன்ற ஹேஷ்டேக் இணைத்து பதிவிட வேண்டும். டீம் பிக்சல் திட்டத்தின் இலக்கு பிக்சல் சாதனங்களை ஏராளமான கிரியேட்டர்களுக்கு சாதனங்களை கொண்டு சேர்ப்பது மட்டும்தான். இதன் மூலம் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப கிரியேட்டர்களை அடைவது இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

google news