Google Android பயனர்களுக்கான ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது நீங்கள் ஒரு callல் பேசிக்கொண்டிருக்கும்போது, யாராவது உங்களை bank app திறக்கச் சொன்னாலோ அல்லது screen share பண்ண சொன்னாலோ, உங்கள் போன் உடனடியாக warning காட்டும்.
இந்தியாவில் அதிகரித்து வரும் பணத்திருட்டை குறைக்க இதை Google கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒரு unknown அல்லது suspicious numberல இருந்து call எடுக்கும்போது, அந்த நேரத்திலே bank app, UPI app, investment app போன்ற finance தொடர்பான எதையாவது திறக்க முயற்சித்தால், Google ஒரு பெரிய alertஐ காட்டும்.
இதனால் “பாதுகாப்பு அபாயம் இருக்கலாம்” என்று எச்சரிக்கும். அதோடு callஐ முடிக்கவும் அல்லது screen sharingஐ நிறுத்தவும் என்ற optionsம் வரும். இந்த warning வந்த உடன், உங்கள் phone தானாகவே screen sharingஐ pause பண்ணிவிடும். இதனால், callல் இருப்பவர் உங்கள் account details, OTP, PIN போன்ற தகவல்களை பார்த்துவிட முடியாது.
Google இந்த அம்சத்தை மெதுவாக பல நாடுகளில் வெளியிட்டுள்ளது. Android 11 மற்றும் அதற்குப் பின் வரும் பெரும்பாலான devicesக்கு இது வரும். இந்த system scams நடந்த patternகளைப் பார்த்து உருவாக்கப்பட்டதாக Google கூறுகிறது.
அதாவது, scammer என்ன trick யூஸ் பண்ணுவார்களோ, அதை முன்னதாக guess செய்து alert கொடுக்கும் மாதிரி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வகை fraudகளில் பலர் சிக்கி வருவதால், Google இந்த பாதுகாப்பு update-ஐ ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை கருவியாக பார்க்கிறது.




