latest news
கூகுள் யூஸ் பண்றீங்களா? ரூ. 1001 கேஷ்பேக்-ஐ மிஸ் பண்ணாதீங்க
பண்டிகை காலத்தை முன்னிட்டு கூகுள் பே செயலியில் சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் ரூ. 1001 வரை கேஷ்பேக் பெற முடியும். மற்ற விளம்பர திட்டங்களை போன்று இந்த கேஷ்பேக் தொகையை பெற பயனர்கள் பலவித பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ஆரு வரை லட்டுக்களை சேகரிக்க வேண்டும்.
கூகுள் பே தீபாவளி கேஷ்பேக் ஆஃபர் விவரங்கள்:
கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள விவரங்களின் படி பயனர்கள் ரூ. 51 முதல் ரூ. 1001 வரையிலான கேஷ்பேக் தொகையை பெற முடியும். இதற்காக பயனர்கள் அதிகபட்சம் ஆறு லட்டுக்களை சேகரிக்க வேண்டும். இதை பெறுவதற்கு பல்வேறு பரிவர்த்தனைகளை செயலியில் செய்து முடித்திருப்பது அவசியம் ஆகும்.
பயனர்கள் கூகுள் பே செயலியை கொண்டு லட்டுக்களை அனுப்பவும் மற்றவர்களிடம் கேட்டு பெறவும் முடியும். கேஷ்பேக் தொகையை பெறுவதற்கு பயனர்கள் ஆறில் ஒரு லட்டையாவது அக்டோபர் 21 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதிக்குள் பெற்றிருக்க வேண்டும்.
லட்டுக்களை சேகரிப்பது எப்படி?
பயனர்கள் ஏதேனும் கடையில் குறைந்த பட்சம் ரூ. 100 மதிப்புள்ள பரிவர்த்தனையை யுபிஐ ஸ்கேன் செய்து முடித்திருக்க வேண்டும்.
ரூ. 100 குறைந்தபட்ச தொகை கொண்ட மொபைல் ரீசார்ஜ் அல்லது போஸ்ட்பெயிட் பில் யுபிஐ மூலம் செலுத்தியிருக்க வேண்டும்.
ரூ. 3000 மதிப்புள்ள கிரெடிட் கார்டு பில்-ஐ யுபிஐ மூலம் செலுத்தி இருக்க வேண்டும்.
பார்ட்னர் பிரான்டுகளிடம் இருந்து குறைந்தபட்சம் ரூ. 200-க்கு கிஃப்டு கார்டு வாங்க வேண்டும்.
பேமன்ட் செயலி மூலம் லட்டு சேகரித்தவர்கள் அதனை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பவோ ஏற்கனவே லட்டு வைத்திருப்பவர்களிடம் அதனை கேட்டுப் பெறவும் முடியும். ஒரே கடை அல்லது நண்பரிடம் அதிக பரிவர்த்தனைகளை செய்தால் லட்டு பெற முடியாது. மேலும், தங்கம், இன்சூரன்ஸ், அமேசான் பே கிஃப்ட் கார்டு பெறுவதற்கான பரிவர்த்தனைகளில் லட்டு பெற முடியாது.