Connect with us

latest news

இணையத்தில் லீக் ஆன பிக்சல் ஃபோல்டு விவரங்கள் – விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Published

on

Google-Pixel-Fold

கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில், கூகுள் இதுபற்றி எவ்வித தகவலையும் வழங்காமல் மவுனம் காத்து வந்தது. தற்போது பிக்சல் ஃபோல்டு பெயரில் கூகுள் தனது முதல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போனை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகிவிட்டது.

மேலும் புதிய பிக்சல் ஃபோல்டு எப்படி காட்சியளிக்கும் என்பதை கூகுள் வெளிப்படையாக தெரிவித்துவிட்டது. பிக்சல் ஃபோல்டு குறித்த முதல் அறிவிப்பிலேயே கூகுள் நிறுவனம் தனது புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்பதை சிறு வீடியோ மூலம் அம்பலப்படுத்திவிட்டது.

Google-Pixel-Fold

இதைத் தொடர்ந்து புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ஏற்கனவே சாம்சங் ஆதிக்கத்தை செலுத்த துவங்கிவிட்ட நிலையில், பல்வேறு சீன பிராண்டுகளும் ஃபோல்டபில் சாதனங்களை விற்பனை செய்ய துவங்கிவிட்டன. இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு சாதனத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி பிக்சல் 7a மற்றும் பிக்சல் டேப்லட் மாடல்களும் இதே நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில், பிக்சல் ஃபோல்டு பற்றி இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள், அதில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

அம்சங்களை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடல் திறக்கப்பட்ட நிலையில், 7.6 இன்ச் 1840×2208 பிக்சல் டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், முன்புறம் 5.8 இன்ச் டிஸ்ப்ளே, கூகுள் நிறுவனத்தின் சொந்த டென்சார் G2 சிப்செட், 256 ஜிபி அல்லது 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வைட் அல்லது பிளாக் என்று இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

Google-Pixel-Fold

புகைப்படங்களை எடுக்க 64MP சோனி IMX787 சென்சார், 10.8MP சாம்சங் S5KJ1 டெலிபோட்டோ லென்ஸ், 12MP சோனி IMX386 அல்ட்ராவைடு லென்ஸ், 8MP சோனி IMX355 சென்சார் மற்றும் சாம்சங் S5K3J1 கேமரா வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பேட்டரியை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடலில் இதுவரை சந்தையில் வெளியாகி இருக்கும் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களை விட அதிக திறன் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் பிக்சல் ஃபோல்டு மாடலில் 4821 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 மாடலில் 4400 எம்ஏஹெச் பேட்டரி, ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் 4520 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மென்பொருளை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடலில் ஆண்ட்ராய்டு 12L ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஒஎஸ் டேப்லட் மற்றும் ஃபோல்டபில் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

சந்தையில் அமோக வரவேற்பை பெற கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலையை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி மாடல் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 112 என்று துவங்கும் என்றும் இதன் 512 ஜிபி மெமரி மாடல் விலை 1919 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரத்து 920 என்று நிர்ணயம் செய்யப்படலாம்.

google news