tech news
Google TV 4K ஸ்டிரீமர் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?
கூகுள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய கூகுள் டிவி ஸ்டிரீமர் (4K) சாதனத்தை அறிமுகம் செய்தது. கூகுள் டிவி ஸ்டிரீமர் சாதனம் கூகுள் ஜெமினி தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் 4GB ரேம், டால்பி விஷன், டால்பி அட்மோஸ், ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.
புதிய கூகுள் டிவி ஸ்டிரீமர் மாடல் அந்நிறுவனத்தின் க்ரோம்காஸ்ட் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்டிரீமர் சாதனம் செட்-டாப்-பாக்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதில் க்ரோம்காஸ்ட் சாதனத்தில் இருந்ததைவிட 22 சதவீதம் அதிவேக பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4GB ரேம், 32GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்டிரீமர் சாதனத்தில் கூகுள் ஏஐ அம்சம் மூலம் தனிப்பட்ட தரவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதை கொண்டு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள், விமர்சனங்கள் மற்றும் பல தகவல்களை பெற முடியும். இத்துடன் ஆம்பியண்ட் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது டிவியை போட்டோ ஃபிரேம் போன்று பயன்படுத்த செய்யும். இந்த அம்சம் ஜெனரேடிவ் ஏஐ மூலம் இயங்குகிறது.
கூகுள் டிவி ஸ்டிரீமர் (4K) மாடலில் 4K HDR, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் HMDI 2.1, USB C போர்ட், ஈத்தர்நெட் போர்ட், டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மற்றும் வாய்ஸ் சர்ச் வசதியை ரிமோட்டில் வழங்குகிறது.
புதிய கூகுள் டிவி ஸ்டிரீமர் (4K) மாடலின் விலை 99.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சாதனத்தின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை செப்டம்பர் 24 ஆம் தேதி கூகுள் ஸ்டோர் மற்றும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.
முதற்கட்டமாக அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனம் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை.