ஐபோன்களுக்கு விலை குறைப்பு- வெளியான சூப்பர் அறிவிப்பு

0
86

ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஐபோன் 15, ஐபோன் 14 மற்றும் சில ஐபோன் மாடல்கள் விலையை குறைத்துள்ளது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய பட்ஜெட் 2024 அறிவிப்பில் ஸ்மார்ட்போன்களுக்கான சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் படி ஐபோன்கள் விலை ரூ. 300 துவங்கி அதிகபட்சம் ரூ. 6000 வரை குறைந்துள்ளது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் பேஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ. 79,600 மற்றும் ரூ. 89,600 என மாறி உள்ளன.

இதேபோன்று ஐபோன் 14 மாடல்களுக்கும் ரூ. 300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை தற்போது ரூ. 69,000 என துவங்குகிறது. ஐபோன் SE சீரிஸ் தவிர, அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடல் ஐபோன் 13 விலை தற்போது ரூ. 59,600 என மாறி இருக்கிறது.

ஐபோன் SE (2022) விலை ரூ. 2,300 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 47,600 என துவங்குகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை ரூ. 1,34,900 இல் இருந்து ரூ. 1,29,800 என மாறி இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ. 1,59,900 இல் இருந்து ரூ. 1,54,000 என மாறி இருக்கிறது.

முன்னதாக சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை வினியோகம் 6.5 சதவீதம் வரை அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்ட தகவல்களில் 2024 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சாம்சங் நிறுவனம் 18.9 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here