tech news
ஒரே சார்ஜ், 21 நாள் வரை நின்னு பேசும்.. சூப்பர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் – எந்த மாடல்?
ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய வாட்ச் GT ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஐகூ நியோ 9s ப்ரோ பிளஸ் மாடலுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இது அலுமினியம் அலாய் கேசிங் கொண்ட ஐகூ பிரான்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சதுரங் வடிவம் கொண்ட டிசைன், 2.5D Curved 1.85-இன்ச் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.
இத்துடன் சிலிகான் மற்றும் லெதர் ஸ்டிராப் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐகூ வாட்ச் GT மாடல் புளூ ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதில் உள்ள சென்சார்கள் பயனர்களின் இதய துடிப்பு, இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, உறக்கம் மற்றும் மாதவிடாய் கால விவரங்களை டிராக் செய்கிறது.
4-சேனல் சென்சார்கள் மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதால் இதில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் அதிகபட்சம் 94.58 சதவீதம் வரை துல்லியமான தகவல்களை வழங்குகிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் ஐகூ வாட்ச் GT மாடலில் ஸ்மார்ட் வின்டோ, வாட்ச் ஃபேஸ் வொர்க்ஷாப் போன்ற ஏஐச வசதிகள் உள்ளன.
இசிம் வசதி கொண்டுள்ள ஐகூ வாட்ச் GT மாடல், காலிங் ஆப்ஷனை பயன்படுத்தும் போது முழு சார்ஜ் செய்தால் 9 நாட்களுக்கு பேக்கப் வழங்கும். ப்ளூடூத் மட்டும் பயன்படுத்தும் போது முழு சார்ஜ் செய்தால் இந்த வாட்ச் அதிகபட்சம் 21 நாட்களுக்கான பேக்கப் வழங்கும் என்று ஐகூ தெரிவித்து உள்ளது.
புதிய ஐகூ வாட்ச் GT மாடல் பிளாக், ஸ்விஃப்ட் பிளாக் மற்றும் ஃபிளீட்டிங் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. சீன சந்தையில் இந்த வாட்ச் விலை CNY499 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5,741 என்று துவங்குகிறது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற 16 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.