tech news
20 நாள் பேட்டரி நிற்கும்.. புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்- ரியல்மி வாட்ச் S2 அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மாரட்வாட்ச் அந்நிறுவனத்தின் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவில் 1.43 இன்ச் டிஸ்ப்ளே, டயல் மற்றும் மாற்றிக் கொள்ளக்கூடிய ஸ்டிராப்களை கொண்டுள்ளது.
இதில் வட்ட வடிவம் கொண்ட AMOLED ஸ்கிரீன், சூப்பர் ஏஐ எஞ்சின், சாட்ஜிபிடி சார்ந்த அசிஸ்டண்ட், ஏஐ வாட்ச் ஃபேஸ்களை உருவாக்கும் வசதி, 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
உடல்நலன் சார்ந்து இதில் ஹார்ட் ரேட், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, ஸ்லீப் மற்றும் மென்ஸ்டூரல் என ஏராளமான டிராக்கர்கள் உள்ளன. இந்த வாட்ச் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 380mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
சாதாரண பயன்பாடுகளின் போது இந்த வாட்ச் 14 நாட்களுக்கான பேக்கப் வழங்கும். ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் ஆஃப் செய்யாமல் பயன்படுத்தும் போது ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம் என ரியல்மி தெரிவித்து உள்ளது. இந்த வாட்ச்-இன் மொத்த ஸ்டான்ட்-பை 38 நாட்கள் ஆகும்.
ரியல்மி வாட்ச் S2 மாடலில் ப்ளூடூத் காலிங் மற்றும் 10mm கனெக்டிவிட்டி உள்ளது. இதில் பயனர்கள் அதிகபட்சம் 4GB வரையிலான MP3 ஃபைல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். இதனை கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போன் கனெக்ட் செய்யாத நிலையிலும், பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.
இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் S2 விலை ரூ. 4,999 என துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் மற்றும் ஓசன் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் மெட்டாலிக் கிரே வெர்ஷன் மற்றும் மூங்கில் இணைக்கப்பட்ட ஸ்டீல் ஸ்டிராப்கள் கொண்ட வெர்ஷன் விலை ரூ. 5,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.