Connect with us

latest news

டக்குனு ரெடியான டெக்னோ.. புது Foldable மாடல் விரைவில் வெளியீடு..!

Published

on

டெக்னோ நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் வெளியாகிறது. இதுதொடர்பான டீசரை டெக்னோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி, தனது முந்தைய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அப்டேட் கொடுத்தது.

அதன்படி அமேசான் தளத்தில் டெக்னோ பேண்டம் வி போல்டு மாடல் முழுமையாக விற்றுத்தீர்ந்தது என டெக்னோ தெரிவித்துள்ளது. இத்துடன் புதிய சாப்டர் விரைவில் துவங்குகிறது என்றும் டெக்னோ தனது டீசரில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் டெக்னோ பேண்டம் வி போல்டு 2 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது.

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் ஓபன், மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 6 போன்ற மாடல்களின் குறைந்த விலை போல்டபில் போன் மாடலாக பேண்டம் வி போல்டு மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் டெக்னோ பேண்டம் வி போல்டு மாடல் ரூ. 88,888 விலையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேண்டம் வி போல்டு மாடலை டெக்னோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த மாடல் முழுமையாக விற்றுத்தீர்ந்தது என அமேசான் தெரிவித்துள்ளது. மேலும், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

சர்வதேச சந்தையில் டெக்னோ பேண்டம் வி போல்டு 2 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த மாடல் உலகின் பல நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று டெக்னோ பிரான்டு தெரிவித்து இருந்தது. அந்த வகையில் தான் டெக்னோ தற்போது இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை மட்டும் வெளியிட்டுள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி குறிப்பிடப்படவில்லை.

google news