Connect with us

latest news

அந்த மனசு தான் கடவுள் – 3 மாதங்களுக்கு இலவசம்..ஒடிடி சந்தா ஆஃபரை அறிவித்த வோடபோன் ஐடியா..

Published

on

Vodafone-Idea-1-Featured-Img

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரூ. 839 ரிசார்ஜ் திட்டத்தை மேம்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்த பிரீபெயிட் திட்டத்தில் பயனர்களுக்கு மூன்று மாத வேலிடிட்டி கொண்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.

முன்னதாக ரூ. 17 துவக்க விலை கொண்ட ‘வி சோட்டா ஹீரோ பேக்’குகளை அறிவித்த வோடபோன் ஐடியா தற்போது இந்த பிரீபெயிட் திட்டத்தை மேம்படுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் வி ஆப் பயன்படுத்தி இந்த திட்டத்தை பெறும் வகையில் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் வி ஆப் அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மட்டுமே இந்த பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டத்திற்கு டாப்-அப் செய்து கொள்ள முடியும்.

vi-logo

vi-logo

தினமும் 2 ஜிபி வீதம் 84 நாட்களுக்கு மொத்தமாக 168 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ. 839 பலன்கள் :

Vi-Rs-839-Offer

Vi-Rs-839-Offer

அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

இதர பலன்கள் :

பின்ஜ் ஆல் நைட்: சர்ஃப், ஸ்டிரீம், ஷேர் என இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா பெற முடியும். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

வீக்-எண்ட் டேட்டா ரோல்-ஓவர்: திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளும் வசதி.

வி மூவிஸ் அண்ட் டிவி: வி மூவிஸ் அண்ட் டிவி ஆப் பயன்படுத்துவதற்கான வி.ஐ.பி. சந்தா வழங்கப்படுகிறது. இதில் திரைப்படங்கள், தொடர்கள், லைவ் டிவி, செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை செயலியில் கண்டுகளிக்க முடியும்.

டேட்டா டிலைட்: ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி வரையிலான பேக்கப் டேட்டா, எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு 121249 என்ற எண்ணிற்கு அழைக்கவோ அல்லது வி செயலியை பயன்படுத்தலாம்.

இந்த சலுகை தற்போது வி அதிகாரப்பூர்வ செயலி மற்றும் வலைதளத்தில் கிடைக்கிறது.

google news