Connect with us

Cricket

இந்தியன் கிரிக்கெட்டில் காம்பீர் காலம்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

Published

on

Gautham gambhir

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இலங்கை தொடருக்கு முன்பாக அவர் அணியுடன் இணைகிறார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்த டி20 உலகக் கோப்பையோடு முடிவடைந்தது. பதவிக் காலத்தை நீட்டிக்க அவரிடம் பிசிசிஐ விடுத்த கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, புதிய பயிற்சியாளர் ரேஸில் முன்னாள் வீரரும் முன்னாள் எம்.பியுமான கௌதம் காம்பீர், தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டபிள்யூ.வி.ராமன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதில், கௌதம் காம்பீரைத் தலைமைப் பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்திய அணி சார்பாக அதிக ஸ்கோர்களைப் பதிவு செய்தவர் காம்பீர். இதுதவிர, 2012 மற்றும் 2014 சீசன்களில் கொல்கத்தா கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வென்றவர். 2024 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா டீமின் மெண்டாராகவும் செயல்பட்டவர்.

அதிரடி மாற்றங்கள்

* அதிரடிக்குப் பெயர்போன காம்பீர், சீனியர்களான ரோஹித், விராட் கோலி உள்ளிட்டோர் விஷயங்களில் ஏற்கனவே தனது முடிவை வெளிப்படையாக பிசிசிஐ-யிடம் சொல்லியிருக்கிறார்.

* 2025-ல் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராஃபிதான் இந்த சீனியர்களுக்கான இறுதி வாய்ப்பு என்பதில் காம்பீர் உறுதியாக இருக்கிறார். இதனால், இந்திய அணி காம்பீர் பயிற்சியின் கீழ் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* காம்பீரின் கீழ் கொல்கத்தா டீமின் செயல்பாடுகள் ஐபிஎல் தொடரில் சற்று வேகம் கூடியதாக இருந்தது. எதிரணியை நிலைகுலையச் செய்யும் திட்டமிடல்களை செயல்படுத்துவதில் வல்லவர். இதனால், டி20 போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடும் அப்படி மாறலாம் என்று எதிர்பார்க்கலாம்.

* ரிங்கு சிங், ஹர்ஷித் ரானா போன்ற இளம் வீரர்களுக்குப் போதிய வாய்ப்பளித்து அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர் என்பதால், எதிர்வரும் காலங்களில் அதேபோன்றதொரு நடவடிக்கை இந்திய அணியிலும் இருக்கலாம்.

* ஸ்பின்னரான சுனில் நரைனை தொடக்க வீரராகக் களமிறக்கி, அவரின் மற்றொரு திறனை உலகுக்குக் காட்டிய காம்பீர், இந்திய அணியைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு அதிரடி முடிவை எடுப்பார் என்று இப்போதே விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன.

* பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் கோச் தொடங்கி மற்ற துணை பயிற்சியாளர்கள் என தனக்கென பிரத்யேக டீமோடு களமிறங்கும் காம்பீர், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியை இப்போதிலிருந்தே தயார்படுத்தும் முடிவோடு இருக்கிறார்.

* டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு ஃபார்மேட்டுக்கும் ஏற்ற வீரர்களோடு தனித்தனி அணியை உருவாக்க காம்பீர் நினைத்திருப்பதால், அப்படியான மாற்றமும் இந்திய அணியில் நிகழும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *