Uncategorized
பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி செய்யபட்டு வரப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்நிறுவன ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வினைக காண முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிட, ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமக நீளும் பணி நேரத்தை குறைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் நிறுவன ஊழியர்கள் தொன்னூறு சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கால வரையற்ற போரட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இருபத்தி ஐந்து நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது. பனிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு சம்பள நிறுத்தம், பணி நீக்கம் என நடவடிக்கைகளை பற்ரி அறிவித்தது சாம்சங் நிறுவனம்.
இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்நிறுவன ஊழியர்கள். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வரும் நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது அறிவுரையின்படி சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் வருகிற திங்கட்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்திட அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் சாம்சங் நிறுவன ஊழியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.