job news
போடு சக்க.. வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 10 முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்..

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் SSC-யில் 2,423 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வேலை பலரின் கனவாக உள்ளது. மத்திய அரசு வேலைகளில் பணி நிரந்தரம், கை நிறைய சம்பளம், ஊழியர்களுக்கு தரமான சலுகைகள் ஆகியவை கிடைக்கும். இதனாலேயே மத்திய அரசு பணியில் சேர்வது பலருடைய விருப்பமாக இருக்கிறது.
கல்வித் தகுதி :
மத்திய அரசின் இந்த வேலைக்கு கல்வி தகுதி பொருத்தவரை பதவிக்கு ஏற்ப மாறுபடும். குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி வரை இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு :
18 வயது நிரம்பியவர்கள் முதல் 30 வயது வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் ஒரு சில பதவிகளுக்கு 18 முதல் 37 வயது வரை விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு தளர்வைப் பொறுத்தவரை எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஓ பி சி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வும் உண்டு.
என்னென்ன காலிபணியிடங்கள் :
கேண்டீன் அசிஸ்டன்ட், ஜூனியர் இன்ஜினியர், ஃபயர் மேன், டிரைவர், ஆபீஸ் அசிஸ்டன்ட், சீனியர் சயின்டிபிக் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் சூப்பரெண்ட் என மொத்தம் 2423 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஸ்டாப் செலக்சன் கமிஷன் அதிகாரப்பூர்வ இணையதளமான ( https://ssc.gov.in/ ) இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கால தொடக்கம் 02.06.2025 முதல் 23.06.2025 அன்று வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் 100 ஆகும்.
தேர்வு நடைபெறும் இடங்கள் :
தமிழகத்தில் தேர்வு மையங்கள் பொருத்தவரை சென்னை, கோயம்புத்தூர் மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
மேலும் முழு அறிவிப்பினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் :
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2025_phase_xiii.pdf
