Connect with us

Uncategorized

அப்பாடா இதுக்குதான் காத்திருந்தோம்..வாட்ஸ் ஆப்பில் அனைவருக்கும் தேவையான வசதி அறிமுகம்..

Published

on

whats app new feature

பிரபல மெட்டாவின் ஒரு நிறுவனமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டுதான் வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுவாக வாட்ஸ் ஆப் உபயோகப்படுத்தும் அனைவருமே சந்திக்க கூடிய மிகபெரிய பிரச்சினை நமக்கு தெரியாதவர்களின் எண்ணை நமது காண்டக்டில் சேமிக்காத வரை நாம் அவருக்கு எந்த விதமான செய்திகளையும் அனுப்ப இயலாது.

இந்த மாதிரியான அன்னியர்களின் எண்ணை நாம் சேமிப்பதின் மூலம் நமது சுயவிவர படத்தினை மற்றவர்கள் எளிதில் திருடிவிடும் அபாயமும் உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்காக வாட்ஸ் ஆப் நிறுவனமானது தற்போது மிகவும் பயனுள்ள வசதியின் தன்னுடைய செயலியில் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆம் இனி நாம் நமkகு தெரியாதவர்களின் எண்ணை சேமிக்க வேண்டிய் அவச்சியம் இல்லை. நாம் அவர்களின் எண்ணை சேமிக்காமலே இனி அவர்களுக்கு நாம் செய்திகLai பரிமாறி கொள்ள முடியும். இதற்கு நாம் வாட்ஸ் ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கமோ அல்லடு அப்டேட்டோ செய்து கொள்ள வேண்டும்.

whats app new features

whats app new features

இதனை எவ்வாறு உபயோகிப்பது?:

  • முதலில் contact list ஐ திறக்கவும். ஒருவேளை நீங்கள் iOSல் வாட்ஸ் ஆப்பினை உபயோகப்படுத்தினால் “Start New chat” என்ற பட்டனை அழுத்தவும்.
  • தற்போது தேடுதல் பெட்டகத்தில் அதில் அந்த நபரின் எண்ணை கொடுக்கவும்.
  • நாம் செலுத்திய நபர் வாட்ஸ் ஆப் உபயோகப்படுத்தினால் அவருக்கான chat box திறக்கும். பின்  நாம் நமது செய்திகளை பரிமாறி கொள்ளலாம்.

இந்த வசதியின் மூலம் நமது Profile Pictures அனைத்துமே பாதுகாப்பானதாக இருக்கும். இது வாட்ஸ் ஆப்பில் உள்ள ஒரு மிக சிறந்த வசதி. இதனை நாம் உபயோகித்து கொள்வோம்.

google news