india
தொடரும் சோகம்… மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து… பலி எண்ணிக்கை அதிகரிப்பு!..
சமீபகாலமாக இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் மீண்டும் விரைவு ரயில் விபத்துக்குள்ளாகி இருப்பது சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பைக்கு ஹெளராவில் இருந்து சென்ற ஹௌரா – மும்பை விரைவு ரயில் ஜார்கண்டில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது. திடீரென ஏற்பட்டு இருக்கும் இந்த விபத்து மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நின்றுக்கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது ஹெளரா ரயில் தடம்புரண்டு இருக்கிறது. விபத்துக்குள்ளான 18 பெட்டிகளில் 16 பெட்டிகள் பயணிகள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரக்கு ரயிலுக்கு அருகிலே ஹெளரா ரயில் தடம்புரண்டதால் இரு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டதாக என்பதை இன்னும் அறியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை விபத்தில் இரண்டு பேர் பலியாகி இருக்கும் நிலையில் 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம்.
சிறு காயங்களுடன் தப்பித்தவர்களுக்கு ஒரு லட்சமும் நிவாரணமாக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பலி எண்ணிக்கையை உயராமல் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கையை எடுக்கவும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் செல்ல இருந்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.