Connect with us

india

WayanadLandslide: வயநாட்டிற்கு விரையும் ராகுல்காந்தி… முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்…

Published

on

கேரளா மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் நடந்த நிலச்சரிவால் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் மாயமாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்க பேரிடர் குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

நள்ளிரவில் இரண்டு முறை ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 1000க்கும் அதிகமானோர் சிக்கி இருக்கின்றனர். இவர்களை மீட்க பலவழிகளில் முயற்சி நடந்துவருகிறது. பலி எண்ணிக்கை 67ஆக உயர்ந்தும் இருக்கிறது. தொடர்ந்து மக்களை உயிருடன் மீட்க பல வழிகளில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் எதிரொலித்தது. கேரள எம்பிகள் வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, கேரளாவிற்கு தேவையானதை மத்திய அரசு செய்து தர வேண்டும்.

கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் நிறைய இடங்களில் நிலச்சரிவு நடக்கிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். மீட்புப்பணிகளை செய்யும் அதே நேரத்தில் சீரமைப்பு பணிகள் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும் எனப் பேசி இருக்கிறார்.

வயநாடு முன்னாள் எம்பி என்பதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடனே கேரளா விரைகின்றனர். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனே கேரளா முதல்வரை தொலைப்பேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்து இருக்கிறாராம். தமிழ்நாடு அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்து கொடுப்போம் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

கேரளாவிற்கு பொது நிதியில் இருந்து ஐந்து கோடியை நிவாரண நிதியாக அளித்து உத்திரவிட்டு இருக்கிறார். 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் இரண்டு மீட்புக்குழு போதிய வசதிகளுடன் உடனே கேரளா விரைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *