india
வயநாடு நிலச்சரிவு…வேதனை தெரிவித்த விஜய்…முதலமைச்சருக்கு கோரிக்கை…
கேரளா வயநாட்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வயநாடு முண்டக்காய் பகுதியில் நேற்றிரவு நிலச்சரவு ஏற்பட்டது.
அதே போல அதிகாலை நான்கு மணியளவில் சூரல் மலை பகுதியில் அடுத்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை நாற்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவினால் வீடுகள், பள்ளிக்கூடங்கள் சேதமடைந்துள்ளது.
விமானம் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள் தீவிரமாக கண்பாணிக்கப்பட்டு வருகிறது. இதே போல மெப்பாடி பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மெப்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ள இந்த பகுதியில் மழையினால் சேற்றின் அளவு அதிகமாக இருந்து வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் அதிக சிரமம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கேரளா நிலச்சரிவு குறித்து தனது வேதனையை தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவம் நடந்துள்ள இடங்களில் போர் கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கேரள அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்.