Connect with us

tech news

₹8999-க்கு புது சாம்சங் போன் அறிமுகம் – எந்த மாடல்?

Published

on

சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புது கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலைத் தொடர்ந்து அறிமுகமாகி இருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி F14 4ஜி என அழைக்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை வரை கேலக்ஸி F14 4ஜி மாடலில் 6.7 இன்ச் FHD+ 90Hz ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸ், 13MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ள கேலக்ஸி F14 4ஜி மாடல் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 ஓஎஸ் அப்கிரேடுகள், 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக சாம்சங் தெரிவித்து இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், மெமரியை நீட்டித்துக் கொள்ள மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25W சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி F14 4ஜி மாடல் மூன்லைட் சில்வர் மற்றும் பெப்பர்மின்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

google news