cinema
மவுசு கூடிப் போன மஞ்சள் கலர் புடவை…திரிஷா தான் காரணமா?…
திரை நட்சத்திரங்களால் யாருமே கவனிக்காத நிலையிருக்கும் எந்த ஒரு விஷயம் கூட திடீரென யாரும் எதிர்பார்த்திராத மிகப்பெரிய வரவேற்பை பெறுவது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட ஒன்று தான். ஒரு நடிகர் அணியும் சட்டை, டி-ஷர்டிலிருந்து, அவர் படத்தில் பயன்படுத்தும் பைக், கார் என அனைத்தையும் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் உற்று நோக்கி அதனை வாங்கி பயன்படுத்துவது வரை ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
திரைப்படங்களில் நடிகர்கள் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைலை கூட ஃபாலோ செய்யும் ரசிகர்கள் வரை இருக்கத் தான் செய்கிறார்கள். சமீபத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள “தி கோட்”படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், வைபவ், பிரேம்ஜி அமரன், சினேகா,லைலா என பல முன்னனி ஆர்டிஸ்ட்டுகளும் விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த படத்தின் இறுதிக் காட்சியில் நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்தில் விஜய் திரிஷா இணைந்து நடனமாடியுள்ள ‘மட்ட’ என்ற பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
“கில்லி” படத்தில் வரும் ‘அப்படிப் போடு’ பாடலில் ஜோடி போட்டு ஆடிய விஜய் – திரிஷா இணை அதே டான்ஸ் ஸ்டெப்புகளை இந்த பாடலிலும் போட்டு ஆடியுள்ளது ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. பாடல் ட்ரென்ட் ஆனதிலிருந்து பாடல் காட்சியில் திரிஷா கட்டியிருந்த மஞ்சள் கலர் புடவையும் ட்ரென்டாக மாறியுள்ளது.
சோஷியல் மீடியாக்களில் வரும் ரீல்ஸ்கள் பலவற்றிலும் இந்த மஞ்சள் நிறப் புடவையே கடந்த சில நாட்களாக அதிகமாக தென்படுகிறது. இதனால் திடீரென வழக்கத்தை விட மஞ்சள் கலர் சேலைக்கு மவுசு அதிகமாகி விட்டதாக பேச்ச்சுக்கள் எழுந்துள்ளது.