latest news
திருமா மாநாட்டில் திமுக…முதல்வர் சந்திப்பிற்கு பின் வெளிவந்துள்ள செய்தி…
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த பழைய வீடியோ வெளியாகி தமிழக அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியிருந்தது. வீடியோ வெளியான சில நேரத்திலேயே திருமாவளவனின் எக்ஸ் வலைதள பக்கத்திலிருந்து டெலிட் செய்யப்பட்டது. இது குறித்து தனது அட்மினிடம் விளக்கம் கேட்க இருப்பதாக திருமாவளவன் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் வருகிற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளார். தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மது ஒழிப்பு மாநாட்டில் பங்கற்க தமிழகத்தின் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் இதுவரை அழைப்பு கொடுக்கப்படவில்லை.
இது குறித்து விளக்கம் அளித்த திருமாவளவனுக்கு காட்டமான பதிலடியை கொடுத்திருந்தார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி. தமிழக முதல்வர் ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.
அதன் பின்னர் திருமாவளவன் சொல்லியிருக்கும் செய்தியில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்க உள்ளது என சொல்லியிருக்கிறார். மது ஒழிப்பு மாநாட்டில் திமுகம் சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பதாக முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னரான செய்தியாளர் சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தெரிவித்திருந்தார்.