நிஜத்துல ஒரு இந்தியன் தாத்தா… மனைவியவே இப்படி காட்டிக் கொடுத்துட்டாரு… வைரலாகும் வீடியோ..!

இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கியதற்காக மனைவியை கணவர் காட்டிக் கொடுத்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யஜோதி. இவரது கணவர் ஸ்வர்ண ஸ்ரீ பத் என்பவர் தனது மனைவிக்கு எதிராக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அரசு ஊழியராக பணியாற்றி வரும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்திருக்கின்றார்.

இதை அறிந்த அவரது கணவர் தனது மனைவி லஞ்சம் வாங்குவதாக போலீசில் புகார் அளித்திருக்கின்றார். மேலும் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை கட்டுக்கட்டாக வாங்கிய லஞ்ச பணத்தினை தனது மனைவி வீட்டின் பூஜையறை படுக்கை அறையில் பதுக்கி வைத்திருப்பதாக வீடியோ எடுத்து போலீசில் கொடுத்து இருக்கின்றார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரை காட்டிக் கொடுத்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் திவ்யஜோதியை கைது செய்தனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Comment