Connect with us

govt update news

பொதுத் தேர்வு எழுத தயாரா ஸ்டூடண்ட்ஸ்?…எக்ஸாம் டேட் அறிவிப்பு வந்தாச்சு…

Published

on

School Exam

தமிழத்தின் நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகாளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

இதன்படி தேதி வாரியான தேர்வு குறித்த தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்புத் பொதுத் தேர்வுகள் 03.03.2025 துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது. பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் 28.03.2025 துவங்கி 15.04.2025 தேதி முடிவடையும் என் தெரிவிக்கப்படுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையின் படி தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு 28.03.2025 அன்றும், ஆங்கில மொழி பாடத்திற்கு- 02.04.2025 அன்றும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

கணிதத்திற்கான தேர்வு 07.04.2025 அன்றும் அறிவியல் பாட தேர்வு 11.04.2025 அன்றும், சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு 15.04.2025 அன்றும். தேர்வு செய்த மொழிப்பாடத்திற்கான தேர்வு 04.04.2025 அன்றும் நடத்தப்பட உள்ளது.

பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையின் படி மொழிப்பாடம்- 05.03.2025, ஆங்கிலம்- 10.03.2025, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025, உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025, இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025, கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 24.03.2025, வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025 அன்றும் நடத்தப்பட உள்ளது.

Exams

Exams

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையின் படி மொழிப்பாடம்- 03.03.2025அன்றும், ஆங்கிலம்- 06.03.2025அன்றும், கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 11.03.2025அன்றும், கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025அன்றும் உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025 அன்றும், வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025 தேதியிலும் நடத்தப்பட உள்ளது. இயற்பியல், பொருளாதாரத்திற்கான தேர்வு 25.03.2025 அன்றும் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிகள் பற்றிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதி 2025லும், பதினொன்றாம் வகுப்பு ததேர்வு மே 19ம் தேதி, 2025 அன்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9, 2025 அன்றும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வுகள் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெறுகிறது.பன்னிரெண்டாம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது எனவும் பொதுத் தேர்வு பற்றிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news