Connect with us

latest news

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்… ஆஃபரில் நியூ மாடல் போன்.. அக்டோபர் 21 வரை மட்டும் பொறுத்துக்கோங்க..!

Published

on

பிளிப்கார்ட்டில் தற்போது தீபாவளியை முன்னிட்டு தீபாவளி சேல் தொடங்க உள்ளது. அதாவது வரும் அக்டோபர் 21-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தீபாவளி சேல் என்ற சிறப்பு விற்பனை தொடங்கி இருக்கின்றது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அந்த வகையில் மோட்டோரோலா ஃபோன்களும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

முதலாவதாக மோட்டோ ஜி85 5ஜி செல்போன் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு முன்பு 17,999 ரூபாய்க்கு விற்பனையான மோட்டோ செல்போன் தீபாவளி ஆஃபரில் 16 ஆயிரத்து 999 விலைக்கு விற்பனையாக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிக் கார்டுகளை பயன்படுத்தினால் உங்களுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி உள்ளது. எனவே இந்த போனை நீங்கள் வெறும் 15,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

இரண்டாவதாக மோட்டோ ஜி64 5ஜி செல்போன் ப்ளிப்கார்ட் தீபாவளி சேலில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு முன்பு இந்த செல்போன் 16 ஆயிரத்து 999 ரூபாயில் விற்பனையாகி வந்த நிலையில் தீபாவளி ஆஃபரில் இந்த செல்போன் 14,999 என்ற விலைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிக் கார்டுகளை பயன்படுத்தி இந்த செல்போனை வாங்கினால் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் வெறும் 13,999 விலையில் இந்த போனை வாங்கலாம்.

மூன்றாவதாக, மோட்டோ ஜி45 5ஜி ப்ளிப்கார்ட் தீபாவளி சேலில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு முன்பு இந்த செல்போன் 10,999 ரூபாயில் விற்பனையாகி வந்த நிலையில் தீபாவளி ஆஃபரில் இந்த செல்போன் 9,999 என்ற விலைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிக் கார்டுகளை பயன்படுத்தி இந்த செல்போனை வாங்கினால் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

அடுத்தது, மோட்டோ ஜி04எஸ் ப்ளிப்கார்ட் தீபாவளி சேலில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு முன்பு இந்த செல்போன் 7,499 ரூபாயில் விற்பனையாகி வந்த நிலையில் தீபாவளி ஆஃபரில் இந்த செல்போன் 6,999 என்ற விலைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த செல்போன் டால்பி அட்மோஸ் சப்போர்ட், 50 எம்பி கேமரா, 5000 பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்த செல்போன் தற்போது பிளிப்கார்ட் தீபாவளி சேலில் விற்பனைக்கு வர உள்ளது. 23 ஆயிரத்து 999 விலைக்கு விற்பனையாகி வந்தது. தற்போது இந்த போனுக்கு 1000 ரூபாய் வங்கி சலுகையும் கிடைக்கின்றது. இதனால் நீங்கள் இந்த செல்போனை 22,999 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. மீடியா டெக் டைமன் சிட்டி 7300, பிஓஎல்இ டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த செல்போனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் செல்போனை பிலிப்கார்ட் பிக் தீபாவளி சேல் விற்பனையில் 20,999 விலையிலும் , மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ செல்போனை நீங்கள் 27,999 விலையிலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news