cinema
நாட்டாமை நடிக்க மட்டும் செய்யலையாமே!…தயாரிப்பாளர் சரத்குமாரை பற்றி தெரியுமா?…
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் உச்ச பட்ச கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வந்தவர். ஹிட் படங்கள் என்றால் அது ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் படங்களாக மட்டுமே தான் இருக்கும் என்ற நேரத்தில் இவர்கள் அனைவரது படங்களுக்கு சவால் விடும் விதமாகி வெளியாகி ஹிட்களை வாரிக்குவித்தது சரத்குமாரின் படங்கள்.
துவக்கத்தில் வில்லனாக மட்டுமே நடித்து வந்த சரத்குமார், நாளடைவில் ஹீரோவாக மாறினார். இவரது கேரியரை மாற்றிய திரைப்படங்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கபடுவது “கேப்டன் பிரபாகரன்”. நடிகர் விஜயகாந்தின் நண்பராகவும், அதிகாரியாகவும் இந்த படத்தில் நடித்திருந்தார் இவர்.
அதன்பின் “சேரன் பாண்டியன்”, “நாட்டாமை”, “கட்டபொம்மன்”, “நட்புக்காக”, ” சூர்யவம்சம்”, “ஐயா” போன்ற அதிக ஹிட் படங்களை கொடுத்த கதாநாயகானாக வலம் வந்தார் தமிழ் சினிமாவில்.
தற்போதுன் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். நடிகர் விஜய் நடித்த “வாரிசு” படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார்.
வில்லன், ஹீரோ, குணசித்திர நடிகராக மட்டுமே தெரியப்படும் சரத்குமார், பட தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த “இது என்ன மாயம்” படத்தின் தயாரிப்பாளர் இவரே.
கார்த்திக், அம்பிகா நடித்து 1998ம் ஆண்டு வெளிவந்த “கண் சிமிட்டும் நேரம்” படத்தை தான் முதன் முதலில் சரத்குமார் தயாரித்திருந்தார். இவரது மனைவி ராதிகா தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வந்தவர்.
இவரும் ஏராளமான திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இயக்குனர் சேரன் கதையில் நயன்தாரா நடித்திருந்த “தலைமகன்” படத்தின் ஹீரோவும் இவரே, இயக்குனரும் இவரே. இவரது மனைவி ராதிகாவின் ராடன் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியானது “தலைமகன்” படம்.