Connect with us

latest news

பேப்பர் போல் மெலிது, குறைந்த எடை.. ஃபோல்டபில் போனின் ஸ்பெஷல் எடிஷன்.. சாம்சங் அசத்தல்

Published

on

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போல் தனது கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிஷன் மாடல் இதுவரை வெளியான கேலக்ஸி Z ஃபோல்டு சீரிஸ் மாடல்களில் மிக மெல்லியதாக இருப்பதோடு, எடை குறைந்த மாடலாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

10.6 மில்லிமீட்டர் தடிமன் கொண்டுள்ள கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்பெஷல் எடிஷன் மாடல் 236 கிராம் எடை கொண்டிருக்கிறது. இது கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்டாண்டர்டு எடிஷன் மாடலை விட 3 கிராம் வரை எடை குறைவு ஆகும். இதில் 8 இன்ச் QXGA+ டிஸ்ப்ளே, உள்புறம் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10MP 3x டெலிபோட்டோ கேமரா, 4MP இன்-ஸ்கிரீன் செல்பி கேமரா, வெளிப்புற திரையின் மேல் 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிராசஸரில் எந்த மாற்றமும் இன்றி இந்த மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 16GB ரேம், IP48 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, மேம்பட்ட ஆர்மர் அலுமினியம், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2, 4400mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் பிளாக் ஷேடோ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1,70,295 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை கொரியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி துவங்குகிறது.

google news