Connect with us

Cricket

7 விக்கெட் வேலையை காட்டுது.. சொன்னதை மாத்திக்கிட்ட சுனில் கவாஸ்கர்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் நேற்று (வியாழன் கிழமை) காலை தெரிவித்த கருத்தை, நேற்று மாலையில் மாற்றிக் கொண்டார். இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு இருந்தார். முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதுதவிர இந்திய அணியில் மூன்று வீரர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இது குறித்து நேற்று காலை போட்டி துவங்கும் முன் பேசிய சுனில் கவாஸ்கர், “ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்கு அணியில் மூன்று மாற்றங்களை செய்தது அணி அவசர சூழலில் இருப்பதாக தெரிகிறது. காயங்கள் ஏற்படாமல் அணியில் மூன்று மாற்றங்களை செய்ததை நான் பார்த்தே இல்லை,” என்று தெரிவித்தார்.

இதன்பிறகு இந்திய அணி பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக செயல்பட்டு ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் “மிகவும் சரியான தேர்வு. அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்ய முடியும் என்பதாலேயே அவர் பிளேயிங் XI-இல் சேர்க்கப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரன் குவிக்க தடுமாறி வருகிறது.

இன்று (வெள்ளிக் கிழமை) காலை முதல் செஷனில் மட்டும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணி தற்போது வரை முதல் இன்னிங்ஸில் 95 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

google news