Cricket
நான் ஒருத்தன் மட்டும் தான் நம்பினேன்… டி20 உலக கோப்பை வெற்றி… மனம் திறந்து பேசிய தோனி..!
டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்றது குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்து பேசி இருக்கின்றார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2008 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பல வீரர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். இந்த இறுதிப் போட்டியில் தனக்கு இருந்த மனநிலை குறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி படம் தனது பேசியிருக்கின்றார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து பேசி இருந்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது ‘இறுதிப்போட்டியை எனது வீட்டில் வைத்து எனது நண்பர்களுடன் பார்த்தேன். அப்போது எனது நண்பர்கள் சிலர் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதுமே எழுந்து வெளியில் சென்று விட்டார்கள். அதை பார்க்காதே எழுந்து வா இந்தியாவுக்கு எல்லாம் முடிந்து விட்டது என்று கூறினார்கள். ஆனால் நான் ஒருவன் மட்டுமே நம்பிக்கையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
இது கிரிக்கெட் எதுவும் முடிவுக்கு வராத வரை எதையும் முடிந்துவிட்டதாக என்ன கூடாது. அப்படி நினைப்பது தவறு என்று கூறினேன். ஆனால் அவர்கள் நம்பவில்லை. அதற்குப் பிறகு நேரம் செல்ல செல்ல அவர்கள் சொல்வது சரிதானோ என்று எனக்கே நினைக்கத் தொடங்கியது. நீங்கள் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களானால் இப்போது என்ன நடக்கும் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுகிறது என்றால் அந்த உணர்வை நினைத்துப் பாருங்கள். கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் ஆர்டர் சற்று வலுவில்லாமல் இருந்த போது தான் எனக்குள் ஒரு திடமான நம்பிக்கை வந்தது இந்திய அணி வெற்றி பெற்று விடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.