Connect with us

latest news

பெண்களுக்கு பண உதவி கொடுக்கும் சிறப்பான 4 திட்டங்கள்… இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!

Published

on

உங்கள் பெண் குழந்தை இருந்தால் அவர்களுக்கு நல்ல பலன் தரக்கூடிய சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பல சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. பெண்களை தன்னம்பிக்கையுடன் உருவாக்கி அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மஜி லட்கி பஹின் யோஜனா, சுபத்ரா யோஜனா, மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற நான்கு திட்டங்கள் பெண் குழந்தைகளுக்கு சிறந்த திட்டங்களாக இருக்கின்றன. அது குறித்து இங்கு பார்ப்போம்.

மஜி லட்கி பஹின் யோஜனா திட்டம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது. மாநில பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக வைத்து உருவாக்கப்பட்டது.. மகாராஷ்டிராவில் 21 வயது முதல் 65 வயது உட்பட்ட பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

குடும்ப வருமானம் 2.5 லட்சத்திற்கு  மிகாமல் இருக்க வேண்டும். இந்த தகுதி உள்ள பெண்களின் வங்கி கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்கள் நிதி உதவி பெற முடியும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

சுபத்ரா யோஜனா: பெண்களுக்கு மிக முக்கியமான திட்டம் சுபத்ரா யோஜனா. இந்த திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிவித்தது. 21 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஆண்டுக்கும் 10 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

5 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மொத்தம் 50 ஆயிரம் ரூபாயை பெறுவார்கள். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் சுபத்ரா டெபிட் கார்ட் ஆகும். இதன் மூலம் அந்த தொகையை நேரடியாக சம்பந்தப்பட்ட பெண்ணின் கணக்கில் மாற்றப்படும். மேலும் கிராம பஞ்சாயத்து அல்லது நகரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்கு உதவும் 100 பெண்களுக்கு கூடுதல் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்: மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இது பெண்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கின்றது. பெண்கள் அதிகபட்சமாக இதில் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5% வட்டி பெற முடியும். இந்தத் திட்டம் வருட காலத்திற்கு மட்டும் பயன்படும். இந்த முதலீட்டில் நல்ல வருமானத்தை கொடுக்கும் சிறந்த திட்டமாகும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இதில் 8.2% சதவீதம் வட்டி கிடைக்கின்றது. இந்த திட்டம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை மையமாக வைத்து தொடங்கப்பட்டது.

இதில் குறைந்த பட்சம் 250 முதல் அதிகபட்ச ஆண்டுக்கு 1.5 முதலீடு செய்யலாம். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பது மட்டுமில்லாமல் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் மகளுக்கு 21 வயது ஆகும்போது கணக்கு முதிர்ச்சி அடைந்துவிடும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *