Finance
நல்ல செய்தி சொல்லியிருக்கும் நாற்பது ஐந்து…விட்டுக்கொடுத்த விலை உயர்வு!…
தங்கத்தின் விலையை பொறுத்த வரை என்றுமே அதிக கவனம் பெறக் கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்களை அதிகமாக கொண்ட இந்தியா போன்ற நாட்டில். சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவை தான் தங்கத்தின் விலையை நாள் தோறும் நிர்ணயம் செய்பவைகளாக இருந்து வருகிறது.
அக்டோபர் மாத இறுதியயை நோக்கி நகர்ந்து வருகிறது காலம். இந்த மாதத் துவக்கத்தில் இருந்தே அதிகமாக உயர்வை மட்டுமே சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்விலை.
நேற்று ஒரு சவரன் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையை பொறுத்த வரை ஐம்பத்தி எட்டாயிரத்து என்னூற்றி என்பது ரூபாயாக (ரூ.58,880/-) இருந்தது.
தங்க சந்தைக்கு நேற்று விடுமுறை என்பதால் சனிக்கிழமை விற்கப்பட்ட விலையிலேயே நேற்றும் விற்கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று தங்கத்தின் விலை இறங்கு முகத்திற்கு வந்து நகைப் பிரியர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.சவரன் ஒன்றிற்கு முன்னூற்றி அறுபது ரூபாய் (ரூ.360/-) குறைந்திருக்கிறது.
இதனால் இன்றைய ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐம்பத்தி எட்டாயிரத்து ஐனூற்றி இருபது ரூபாயாக (ரூ.58,520/-)உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நாற்பத்தி ஐந்து (ரூ. 45/-) குறைந்து நேற்றைய விலையான ஏழாயிரத்து முன்னூற்றி அறுபது ரூபாயிலிருந்து (ரூ.7,360/-) இறங்கி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து (ரூ. 7,315/-) ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் இன்று எந்த விதாமான மாற்றமும் காணப்படவில்லை. நேற்றைய விலையான ஒரு கிராம் நூற்றி ஏழு ரூபாய்க்கும் (ரூ.107/-), ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாகவும் (ரூ.1,07,000/-) இருக்கிறது