Connect with us

Cricket

நானும் விளையாடனும்… 17 கிலோ எடையை குறைத்த இந்திய வீரர்… இவர் கம்பீரோட ஃபேவரட் ஆச்சே..!

Published

on

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய வீரர் 17 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கின்றார்.

சமீபத்தில் இந்திய அணியானது நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் 2022க்கு பிறகு இந்தியா படுதோல்வியை அடைந்தது. 2012 முதல் 18 டெஸ்ட் தொடர்களில் இந்தியா வென்ற நிலையில் நியூசிலாந்து அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்திய அணியானது அடுத்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் தொடர் என ஆறு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு முன்னேற முடியும். ஆறில் நான்கு வெற்றிகளை பெறாமல் அதற்கும் குறைவான வெற்றிகளை பெற்றால் மற்ற அணியின் வெற்றி தோல்விகளை பொறுத்து இந்தியா பைனலுக்கு செல்வது முடிவாகும்.

இதனால் அடுத்து வரும் 6 டெஸ்ட் போட்டிகளுமே இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறி இருக்கின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் புதுமுக வீரரான ஹர்ஷித் ரானா, நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். நிதீஷ்குமார் ரெட்டி ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்.

ஆனால் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. டெஸ்ட் தொடரில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் போன்ற பவுலர்கள் இருக்கும்போது ஹர்ஷித்ராணாவை சேர்த்தது ஏன் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய போது சிறப்பாக பந்துவீசி கௌதம் கம்பீரை ஹர்ஷித் ரானா இம்ப்ரஸ் செய்திருப்பதால் தான் அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்ற.

து மேலும் அவர் உடல் எடை அதிகமாக இருப்பதால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக 17 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். அதன் பிறகு தான் அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் சேர்ந்து இருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *