ஃபைனலில் வெற்றி வாகை சூடிய ராயல் சேலஞ்சர்ஸ்… இந்தாண்டின் சாதனை… வேதனை!

2025 ஐபிஎல் தொடர் பைனலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தது. ஆனால் அதற்கு எதிராக விளையாடிய ஆர்சிபி அணி அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் முதன்முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்றது. அகமதாபாத்தில்  நடைபெற்ற பைனலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் 9 விக்கெட்டுகள் என்ற நிலையில் முதல் பேட்டிங்கை முடித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 191 என்ற இலக்கோடு ஆடி ஜெயிக்க நினைத்தது. ஆனால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்து வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

விராட் கோலியின் தலைமையில் இந்த வெற்றி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 7 பேர் இறந்துள்ளது வேதனைக்குரிய விஷயம்.
ஆர்சிபி அணியைப் பொருத்தவரையில் ஒரே ஆண்டில் பல சாதனைகளைச் செய்துள்ளது. முதல் முறையாக 9 ஆர்சிபி வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றனர்.

முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் என்ற எதிரணியை 3 முறை தோற்கடித்தது. முதல் முறையா ஐபிஎல் சீசனில் 10 வெவ்வேறு வீரர்கள் 50க்கும் அதிகமான ரன்களை எடுத்தனர். முதன்முறையாக ஐபிஎல் பிளே ஆப் ல டாப் 7 பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சமாக 15 ரன்களை எடுத்தனர். சேப்பாக்கத்தில் முதல் முறையாக சிஎஸ்கேவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் முதலாக ஐபிஎல் பிளே ஆப் இல் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட் செய்தது.

பைனலில் கடைசி ஓவரில் ஷஷாங்க் அதிரடி ஆட்டக்காரராக மாறினார். அவர் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனாலும் 2 ஓவர்கள் பந்துகளை வீணடித்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஜெயித்து விட்டது. கடைசியில் இது மேட்சா, டெஸ்ட் மேட்சா என பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்கள் சோர்ந்து விட்டனர். அந்தளவு மோசமான ஆட்டத்தை ஆடிவிட்டனர். இதுதான் தோல்விக்குக் காரணமாகி உள்ளது.

Leave a Comment