மூன்றாக மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் – விரைவில் ரிலீஸ்?

சாம்சங் நிறுவனம் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் இருப்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதுவகை ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சீன செர்டிபிகேஷன் டேட்டாபேஸில் இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.

சீனாவின் 3சி செர்டிபிகேஷனில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் புதிய மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் SM-F9680 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. இது “5ஜி டிஜிட்டல் மொபைல் டெலிபோன் செட்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் சாம்சங் நிறுவனம் சார்ஜிங் அடாப்டர் வழங்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் EP-TA800 சார்ஜிங் அடாப்டருடன் பட்டியலிடப்பட்டுள்ளதால் இது சார்ஜிங் அடாப்டர் உடனேயே விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இத்துடன் புதிய மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 25 வாட் சார்ஜிங் வசதியுடன் வரும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ஹூவாய் நிறுவனம் மட்டுமே மேட் XT அல்டிமேட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒற்றை மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக மேட் XT அல்டிமேட் இருக்கிறது.

இந்த வரிசையில் சாம்சங் தனது மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் போது, அந்த மாடல் இந்த பிரிவில் அறிமுகமான இரண்டாவது ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை சாம்சங் விரைவில் தனது கேலக்ஸி Z ப்ளிப் 7 மற்றும் கேலக்ஸி Z போல்ட் 7 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Leave a Comment