மிட்-ரேஞ்சில் மிரட்டும் மோட்டோ – விரைவில் வெளியாகும் புது ஸ்மார்ட்போன் மாடல்

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று மோட்டோ எட்ஜ் 60. முன்னதாக மோட்டோ நிறுவனம் தனது மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த நிலையில், தற்போது எட்ஜ் 60 ஸ்மார்ட்போனினை வருகிற 10-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய மோட்டோரோலா முடிவு செய்துள்ளது.

கடந்த 30 நாட்களில் மோட்டோரோலா அறிமுகம் செய்யும் இரண்டாவது ஸ்மார்ட்போன் மாடலாக புதிய எட்ஜ் 60 இருக்கும். புதிய மோட்டோ எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் பேன்டோன் கிப்ரால்டர் சீ மற்றும் பேன்டோன் ஷாம்ராக் நிற ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த மோட்டோ யுஐ கொண்டிருக்கும். இத்துடன் மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்டேட், நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய மோட்டோ எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் 1.5K Quad Curved pOLED டிஸ்ப்ளே, HDR10+ கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த எட்ஜ் ஸ்மார்ட்போனில் டிமென்சிட்டி 7300 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரியை பொருத்தவரை மோட்டோ எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் 5500எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா 3x ஆப்டிக்கல் ஜூம், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி ஆடியோ வழங்கப்படுகிறது. இத்துடன் IP68 அல்லது IP69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

விலையை பொருத்தவரை இந்திய சந்தையில் மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 29,990-க்கு கிடைக்கிறது. அந்த வகையில், புதிய மோட்டோ எட்ஜ் 60 விலை இதைவிட சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

Leave a Comment