ஒன் பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன் பிளஸ் பேட் 3 யை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் விற்பனை மட்டுமல்லாது டேப் விற்பனையிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய பேட்-3 பற்றி பார்ப்போம்.
13.2 இன்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது (3392 * 2400) ltpo 144 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ்ரேட் உடன் வருகிறது. இதனால் கேம் விளையாடுவது வீடியோக்கள் பார்ப்பது போன்றவை மிகவும் துல்லியமாகவும் தடையின்றி இருக்கும். இதில் மொத்தம் 8 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோ திறனை மேம்படுத்த Omni bearing sound field technology. எனும் தொழில்நுட்பத்துடன் வருவதால் தெளிவான ஆடியோவை நாம் கேட்டு மகிழலாம்.
இதில் முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால் இதன் பேட்டரி 12140 mah உடன் வருகிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 80w ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 15 os மற்றும் இதில் qualcom Snapdragon 8 Elite soc என்ற ப்ராசசர் உடன் வருகிறது. மிகவும் சக்தி வாய்ந்த ப்ராசசர் என்பதால் மல்டிபிள் வேலைகளை ஒரே நேரத்தில் வேகமாகவும் ஸ்மூத்தாகவும் செய்யக்கூடியதாக இருக்கும்.

இது கேமரா வசதி பொறுத்தவரை பின்பக்கம் 13 மெகாபிக்ஸலும் முன்பக்கம் 8 மெகாபிக்ஸலுடன் வருகிறது.
இதில் AI writer, AI summarizer என்ற தொழில்நுட்பம் இருப்பதால் கார்ப்பரேட் அலுவலக வேலைகள் ரொம்ப எளிதாகவே பார்க்கலாம். மேலும் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற வசதிகள் இருப்பதால் பயனாளர்களுக்கு சிரமம் இல்லாமல் வேலை செய்யலாம். மேலும் இதில் ஸ்பிளிட் ஸ்கிரீன் வசதியும் உள்ளது.
ஒன் பிளஸ் நிறுவனம் இந்த oneplus pad-3 யின் விலையை இன்னும் வெளியிடவில்லை. இதை அறிமுகம் மட்டும் தான் செய்துள்ளது. விலை நிர்ணயம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.