250 mp கேமராவுடன் மிட் ரேஞ்சில் மிரட்ட வரும் oppo f23 ப்ரோ பிளஸ்..? வெளியான தகவல்

ஒப்போ நிறுவனம் பட்ஜெட் ஃபோன்களின் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. மிட் ரேஞ்ச் வகைகளில் கலக்க oppo புதிய மாடல் போனை அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த மொபைலின் லீக் இமேஜஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் oppo f23 pro plus மாடல் போனின் லீக்ஸ் வெளிவந்துள்ளது.

அதில் 250mp மெயின் கேமரா மற்றும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்க 144 hz ஆம்மோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 150 w பாஸ்ட் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. இருந்தாலும் இதே சிறப்பம்சங்களுடன் வந்தால் மார்க்கெட்டில் ஓப்போ தனியா ஒரு இடத்தில் இருக்கும். மக்களின் வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Oppo f23 Pro Plus
Oppo f23 Pro Plus

பிளாக், ப்ளூ, சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதனுடன் ip65 தூசு மற்றும் தண்ணீர் பாதுகாப்பில் உறுதி செய்கிறது. வழக்கமாக வரக்கூடிய இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது. மேலும் மல்டிமீடியா அனுபவத்தை அதிகரிக்க ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதன் எடை வெறும் 187g மற்றும் 7.9 mm தடிமன் கொண்டு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஒரு நாள் முழுக்க பயன்படுத்தக் கூடிய விதத்தில் இந்த போனின் வடிவமைப்பு உள்ளது.

இதில் 4800 பேட்டரி உள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 150w சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து சார்ஜ் செய்யும் பொழுது 0-வில் இருந்து 100% முழுமையாக சார்ஜ் ஏற எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே. இதன் விலை 12 ஜிபி + 256 gb வேரியன்ட் 35, 0000 ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment