108 எம் பி கேமராவுடன் தாறுமாறு போன்.. அதிரடி விலை குறைப்பு செய்த Realme என்ன மாடல் தெரியுமா..?

ரியல் மீ நிறுவனம் தனது ரியல் மீ 12 மொபைலை கடந்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது இதன் 6+128 விலை 16999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 8+128 வேரியண்டிற்கு 17999 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான அமேசானில் 8gb ரேம் வேரியன்டே 14 899 பட்ஜெட்டில் கிடைக்கின்றது

இந்த மொபைல் கேமரா பிரியர்கள் ஆனது என்றே சொல்லலாம். 108 எம்பி பின்புற கேமராவுடன் 3x ஜூமிங் வசதி கொண்டுள்ளது. மேலும் 5000mah கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 45 w ஃபாஸ்ட் சார்ஜர் உடன் வருகிறது. மேலும் பின்புறத்தில் இரண்டு எம்பி போர்ட்ரைட் கேமரா சப்போர்டுடன் வருகிறது.

realme 12
realme 12

முன்பக்க கேமரா 8 மெகாபிக்சல் உடன் வருகிறது. ஒரு வருட பழைய மாடல் என்பதால் ஆண்ட்ராய்டு 14 உடன் இந்த மொபைல் இயங்கும். ரியல் மீ ui 5.0 மற்றும்‌ டைனமிக் பட்டன், 8+8 விர்ச்சுவல் மெமரியும் உள்ளது. இது போக இன்று வரக்கூடிய பல மொபைல்களில் இல்லாத ஒரு வசதியான மெமரி கார்டு ஸ்லாட். இதில் உள்ளது அதிகபட்சம் 2 டிபி வரை சப்போர்ட்டும் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் பெர்ஃபார்மன்ஸில் கலக்கும் மீடியா டெக் ஆக்டோ பிராஸசர் 6100 + என்ற பிராஸசர் கிடைக்கிறது. 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கிறது. இது 120 hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இந்த மொபைலில் இன் டிஸ்ப்ளேவுக்கு பதிலாக சைடு மவுண்ட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் பர்பிள் மற்றும் கிரீன் என இரு கலரில் விற்பனைக்கு கிடைக்கப் பெறுகிறது.

Leave a Comment