தற்போது உள்ள காலங்களில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்களே கிடையாது. மேலும் ஸ்மார்ட் போன்கள் நாம் பயன்பாட்டை நாளுக்கு நாள் எளிதாக்கிறது. ஒரு பக்கம் இது நமக்கு நன்மை செய்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்தி பலர் தப்பான வழிகளில் பயன்படுத்தி மக்களின் பணத்தை அபகரிக்கின்றனர்.
இதனை தடுக்க ஏர்டெல் நிறுவனம் புதிய செக் ஒன்றை வைத்துள்ளது. நீங்கள் ஒரு ஏர்டெல் பயனாளியாக இருந்தால் இதில் உள்ள AI இயக்கப்படும் மோசடி கண்டுபிடிக்கப்பட்டு அதனை தடுத்து விடுகிறது. அதுவும் 100 மில்லி செகண்ட்டுக்கு கீழாக இந்த வேலை நடக்கிறது. இதனால் இதுவரை 1,80,000 தீங்கு விளைவிக்கும் இணைப்புகள் தடுக்கப்பட்டு 3000000க்கும் மேற்பட்ட பயனர்களை பாதுகாத்துள்ளது.
நமது அன்றாட ம் பயன்படுத்தும் செயலிகளான வாட்ஸ் அப், டெலிகிராம் மின்னஞ்சல், முகநூல், எஸ்எம்எஸ் போன்றவைகளில் வரும் தேவையற்ற இணைப்புகளை இந்த AI ஸ்கேன் செய்து பில்டர் செய்கிறது. தினமும் இது 100 கோடிக்கும் அதிகமான இணைப்புகளை ஆராய்ந்து 100 மில்லி செகண்ட் களுக்குள் தீங்கு விளைவிக்கும் தளங்களைத் தடுக்கிறது.
மேலும் ஏர்டெல் நிறுவனம் கூறுவதாக,” இதன் மூலம் எங்கள் தீர்வு தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சைபர் மோசடிகளுக்கு எதிரான முழுமையான பாதுகாப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் இதனால் அவர்கள் டிஜிட்டல் சூழலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்” என்று தெரிவிக்கிறது.