இந்தியாவில் முன்னணி காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி. பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமான எல்ஐசி இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மக்களுக்கு பல்வேறு சேமிப்பு, முதலீட்டு மற்றும் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பிரிவினருக்கும் பல்வேறு திட்டங்களை எல்ஐசி வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் மிக முக்கியமானவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக “சில்ரன் மணி பேக் பாலிசி” (Children Money Back Policy) திட்டம் உள்ளது.
குழந்தை பிறந்தது முதல் 12 வயது வரை இருக்கும் போது இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பணம் குழந்தையின் எதிர்கால பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தை பிறந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் ரூ. 150 முதலீடு செய்யும் போது மாதம் ரூ. 4500 செலுத்த வேண்டும்.
இந்தத் தொகை ஒரு வருடத்திற்கு ரூ. 55,000 ஆக இருக்கும். தொடர்ச்சியாக 25 ஆண்டுள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மொத்த முதலீட்டு தொகை மட்டும் ரூ. 14 லட்சமாக இருக்கும். இந்தத் திட்டம் முதிர்ச்சி அடைந்த பிறகு இதில் கிடைக்கும் போனஸ் தொகை மற்றும் வட்டியை சேர்ந்து ரூ. 19 லட்சம் வரை பெற முடியும்.
எல்ஐசி சில்ரன் மணி பேக் பாலிசி திட்டத்தில் பிரீமியம் தொகையை செலுத்த பல்வேறு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதனை மாதாந்திர அளவிலும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அளவிலும் செலுத்த முடியும். ஒவ்வொருத்தரின் நிதி நிலை மற்றும் வருமானத்திற்கு ஏற்ப பிரீமியம் தொகையை செலுத்தும் வசதி இந்தத் திட்டத்தில் எல்ஐசி வழங்குறது.
இந்தத் திட்டத்தில் பணம் செலுத்தியவர்கள் குழந்தை 18, 20, 22 அல்லது 25 வயதை எட்டும் போது முதலீட்டு தொகையின் ஒரு பகுதி திருப்பி அளிக்கப்படும். 18, 20 அல்லது 22 வயதில் காப்பீட்டு தொகையில் 20 சதவீதம் திருப்பித்தர முடியும். 25 வயதில் மீதமுள்ள 40 சதவீத போனஸ் உடன் சேர்த்து வழங்கப்படும்.
ஒருவேளை பாலிசிதாரர் இந்தத் திட்டம் முடிவதற்குள் உயிரிழக்கும் பட்சத்தில் நிலையான தொகை திட்டத்தில் நியமனதாரராக சேர்க்கப்பட்டவருக்கு வழங்கப்படும். இந்தத் தொகை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் தொகையில் குறைந்தபட்சம் 105 சதவீதமாக இருக்கும்.