அடிச்சு நொறுக்கும் அமேசான்… 16GB ரேம், 50MP கேமரா… நத்திங் போனுக்கு ரூ. 10,077 தள்ளுபடி..!

நத்திங் நிறுவனத்தின் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடல் நத்திங் போன் (2a) பிளஸ். இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ், சாம்சங், விவோ என முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு இந்த பிரிவில் நல்ல போட்டியை ஏற்படுத்தி வருகிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பிருந்தே நத்திங் போன் (2a) பிளஸ் மாடல் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பிறகு, இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் இதன் விலை வாடிக்கையாளர்களை கவர்ந்தது. தற்போது நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அமேசான் இந்தியா நத்திங் போன் (2a) பிளஸ் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான நத்திங் போன் (2a) பிளஸ் மாடல் மிட் ரேஞ்ச் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டது.

சலுகை விவரங்கள்:

அமேசான் இந்தியா வலைதளத்தில் நத்திங் போன் (2a) பிளஸ் மாடலுக்கு தற்போது 33 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 29,999-இல் இருந்து ரூ. 19,998 ஆக குறைத்துள்ளது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 10,077 குறைவு ஆகும்.

இதுதவிர அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் பிரைம் சந்தாதாரர்களுக்கு 5 சதவீதம் வரை கேஷ்பேக், பிரைம் சந்தா இல்லாதவர்களுக்கு 3 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மாத தவணை மற்றும் அமேசான் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், மாத தவணை முறை சலுகையில் கூடுதல் சேமிப்புகள் மற்றும் ஜிஎஸ்டி பரிவர்த்தனைகளுக்கு 28 சதவீதம் வரை சேமிப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது.

நத்திங் போன் (2a) பிளஸ் அம்சங்கள்:

நத்திங் நிறுவனத்தின் போன் (2a) பிளஸ் மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7350 ப்ரோ 5ஜி பிராசஸர், 50MP + 50MP பிரைமரி கேமரா, 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. நத்திங் போன் (2a) பிளஸ் மாடல் ஆண்ட்ராய்டு சார்ந்த நத்திங் ஓஎஸ் 2.6 கொண்டுள்ளது.

Leave a Comment